மரைக்காயர் ஐயாருக்கு எனது பதில்கள் 1
உ
சிவமயம்
டிஸ்க்கிளைமர்: இந்த பதிவின் மூலம் என் இனிய இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்களின் மனதை புன்படுத்தும் நோக்கமோ அல்லது நகைக்கும் நோக்கமோ கிடையாது என்பதையும் மதிப்பிற்குறிய மரைக்காயர் ஐயார் அவர்கள் திரு எழில் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இடப்பட்டது என்பதையும் இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள் கன்னியமான சொற்பிரயோகங்களுடன் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஸ்க்கிளைமர்: இந்த பதிவில் கன்னியமான சொற்களை பிரயோகிக்காத பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
டிஸ்க்கிளைமர்: இங்கே எனது வாதத்தின் மூலம் எதிர் தரப்பினர் மிகவும் கடுமையாக தாக்கப்படுவதை யாரேனும் உணர்ந்தால் தாக்கப்படுவது எதிர்க்கருத்து தெரிவித்த நபர் அல்ல அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தே என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம். நான் அதிகம் கற்றுணராத இளைஞன் தயவு செய்து சொற்பிழைகள், எழுத்துப்பிழைகளை கவணத்திற்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை. அதற்குமுன் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்து மதம் என்ற சொல்வழக்கானது நவீன கால்த்தில் ஏற்பட்ட ஒன்றாகும். அது பிரித்தாணியரின் ஆட்ச்சிக்காலத்திலே இந்தியாவில் வழங்கிய இஸ்லாம், கிறிஸ்தவம் அகியவற்றை சாராத சமய நெறிகள் அனைத்தையும் பொதுமையிற் குறிப்பதாகும். ஆனால் வேதங்களை அதாரமாக கொண்ட சமயங்களே இந்துமதம் என்று வழங்கப்படுகின்றது. முற்காலத்தில் வழங்கப்பட்ட சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுவகை சமயங்களையும் சம்பிரதாயபூர்வமாக ஷண்மதங்கள் என்று
கூறுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஷண்மதங்களைப் பற்றிய பேச்சு பொறுத்தமற்றதாகும். காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பன இன்று தனித்தனியாக வழங்கப்படவில்லை அவற்றிற்குரிய அம்சங்கள்
சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றோடு சங்கமமாகிவிட்டன. முன்னொரு காலத்தில் சைவமானது பரதகண்டமனைத்திலும் பரவிப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. " சுவர்ணபூமி" என்று சொல்லப்படுகின்ற காம்போஜதேசம், சம்பா சாவகம் முதலிய தென்கிழக்காசிய பகுதிகளிலும் அது பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. துருக்கியரின் அதிபத்தியம் ஏற்பட்டிருந்த காலங்களில் சைவத்திற்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 15ம், 16ம் நூற்றாண்டுளில் வட இந்தியாவிலும், மஹாரஷ்டிரத்திலும் ஏற்பட்ட சமயமறுமல்ர்ச்சியானது வைணவ சம்பிரதாயத்தின் மூலமாக பக்திநெறியை ஆதாரமாக கொண்டு ஏற்பட்ட ஒன்றாகும். இராமாணந்தர், கபீர்தாஸர், மீராபாய், துளசி தாஸர், சைதன்யர் முதலிய பரம பாகவதர்கள் அந்த இயக்கத்தை மேன்மை பெறச்செய்தனர். அதன் விளைவாக வடதேசமெங்கும் இந்துக்களிடையே வைனவம் பொதுவான சமயநெறியானது. இராமர் வழிபாடும், கிருஷ்ணர் வழிபாடும் பொதுவழக்காகி விட்டது ஆயினும் சிவனையும் சிவவழிபாட்டையும் அவர்கள் ஒதுக்கி வைக்கவில்லை. சிவராத்திரி முதலான விரதங்களையும் வட இந்தியாவில் அனுட்டிக்கின்றனர். அதேபோல் விநாயகருக்கும், முருகனுக்கும் வழிபாடாற்றும் அம்சம் வைணவராகிய இந்துக்களிடமும்
காணப்படுகின்றது. மத்திய காலத்திலே பெருவளர்ச்சியுற்ற சாக்தம் பெருமளவிற்கு சைவம், வைணவம் ஆகியவற்றோடு கலப்புற்றது. அதன் அம்சங்கள் அச்சமயங்களோடு இனைந்துவிட்டன.
(மூலம் : இலங்கையில் இந்து சமயம்
வெளியீடு : அகில இலங்கை இந்துமாமன்றம் + குமரன் புத்தக இல்லம்.)
இன்று உலகமெல்லாம் பரந்துவாழும் இந்துக்களில் பெரும்பாலானோர் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும் விஸ்னுவழிபாடும் அவர்களிடம் காணப்படுகின்றது. அதேநேரம் விஸ்னுவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் வைணவ சமயமும் இன்று நடைமுறையிற் காணப்படுகின்றது. இருப்பினும் வைணவ சமயமும் சேர்ந்ததுதான் தான் இந்துமதம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதை ஏன் இங்கே தெரிவிக்கிறேன் என்றால் எனது நண்பர்கள் பலரிற்கு இந்த விடயம் புரியாமல் உள்ளது.
சரி மரைக்காயர் ஐயாரே உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்
இதுதானே உங்கள் முதலாவது கேள்வி
1. கடவுள் யார்? அல்லது யாவர்?
இந்து மதத்தில் கடவுளர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சிவன், விஸ்னு, அம்மன், காளி ஐயப்பன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அத்தோடு
இந்த பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பன்றி - வராகமூர்த்தி
நாய் - பைரவமூர்த்தி
மாடு - கோமாதா
யானை - கணபதி
சிங்கம் - நரசிம்மாவதாரம்
மீன் - மச்சாவதாரம்
முதலை - கூர்மாவதாரம்
மாட்டிடையன், பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்
குரங்கு - அனுமன்
சுடலைப் பித்தன் - சிவன்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்
பாம்பு- நாகராஜன்
மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி
வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்
இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் இவர்களில் ஒருவரை அல்லது பலரை அல்லது அனைவரையும் தத்தமது விருப்பப்படி வணங்களாம்.
இப்படியாக இந்து மததில் அதிகமான கடவுளர் இருந்தாலும் அவை யாவுமே ஒரே இறைவனாகிய பிரம்மத்தின் அவதாரமே. அதாவது இந்து மதத்தில் எந்த இறைவனை வணங்கினாலும் வணங்கப்படுவது என்னவோ முலுமுதற் கடவுளாகிய (பிரம்மமாகிய) பரமேஸ்வரனே ஆகும்.
அப்படியானால் அதாவது அனைத்துக் கடவுளரும் ஒரே பிரமத்தின் அவதாரம் என்றால் ஏன் பல கடவுளர்கள் அவதரிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்
இத்தனை கடவுள் அவதாரங்கள் எதற்கு என்றால் இறைவனிடம் வரம் பெற்று தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திய அசுரர்களை அழித்து தேவர்களையும் மனிதர்களையும் காக்கும் பொருட்டு மேற்கொண்டவையே இந்த அவதாரங்கள்.
அப்படியேயானாலும் பிரம்மத்தினால் அவதாரம் எடுக்காமல் நேரடியாக இந்த அசுரர்களை அழிக்கமுடியாதா? என்று நீங்கள் கேட்கலாம்
அதாவது பிரம்மமாகிய இறைவன் பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் அவன் பக்தர்கள் உண்மையான அன்புடன் எதைக் கேட்டாலும் வழங்குவான் அதற்காக பக்தர்கள் கொண்டுள்ள அன்பு உண்மையானதா என்பதை அறிய கடுமையான சோதனைகளையும் ஏற்படுத்துவான். தூய்மயான, உண்மையான அன்பினால் இறைவனை வசப்படுத்திவிடலாம். அசுரர்கள் எனப்படுபவர்கள் கடுமையான தவம் புரிந்து தமது அன்பின் வலிமையினால் இறைவனிடம் தமக்கு இஷ்ட சித்திகளை பெற்று விடுவர். முக்காலமும் உணர்ந்த இறைவனும் அவர்களுக்கு வாரி வழங்குவான் அவன் தான் இல்லை என்னும் சொல் அறியாதவனாயிற்றே.
"அசுரர்கள்" என்ற பெயர் இவர்களுக்கு ஏன் வந்ததென்றால் இவர்கள் தாங்கள் எண்ணிய கருமத்திலும் கொண்ட இலட்சியத்திலும் மிகவும் உறுதியாக இருந்து இறைவனிடமிருந்து இஷ்ட வரங்களை பெறுவதில் அசுரத்தனமான உறுதியுடன் இருப்பதால் இப்பெயர் வந்தது. இப்படியாக இவர்கள் இறைவனை அன்பினால் வசப்படுத்தி தமது இஷ்ட சித்திகளையும் தமது அன்பினால் தம்மை எளிதில் யாராலும் வெல்ல முடியாதவாறன வரங்களையும் இறைவனிடமிருந்து பெறுவர். இவர்கள் வரம் பெறும் போது என்னவோ நல்லவர்கள் தான் ஆனால் தாம் பெற்ற வரங்களினாள் மமதை கொண்ட அசுரர்கள் ஆணவத்தினால் தீயவர்களாகி தேவர்களையும் மானிடர்களையும் மற்றும் அனைவரையும் துன்புறுத்தும் போது இறைவன் அவர்களுக்களித்த வரத்தினால் (வாக்குறிதியினால்) நேரடியாக அவர்களை அழிக்க முடியாது அதனால் அவர்களுக்களித்த வரத்தின் படி அவர்களை அழிப்பதற்கு ஒவ்வொறு அவதாரங்களாக எடுக்கவேண்டியதாகி விடுகிறது இவ்வாறு இறைவன் எடுத்த அவதாரங்களினால் துயர் களையப்பெற்ற தேவர்களும், மானிடர்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அவ்வவதார மூர்த்திகளை வணங்குகின்றனர். இறைவன் என்னவோ தான் வழங்கும், வழங்கிய வரத்தினால் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கபோகிறது என்பதை எல்லாம் நன்றாகவே அறிவான் ஆயினும் அவனோ உண்மையான, தூய்மையான அன்பிற்கு கட்டுப்பட்டவன் ஆதலால் அவனால் அவன் பக்தன் கேட்பதை மறுக்கமுடியாது.
இந்துமதம் ஒரு கூட்டுக்குடும்பம் போன்றது அதில் இறைவனானவன் ஒரு குடும்பத் தலைவன் போன்றவன். ஒரு குடும்பத் தலைவன் தன் குழந்தைகளுக்கு அப்பாவாகவும், மனைவிக்குக் கணவனாகவும், மருமகனுக்கு மாமனாராகவும், பேரக் குழந்தைக்கு தாத்தாவாகவும் பல்வேறு அம்சமாய்த் திகழ்கிறான். இதனால் ஒரே குடும்பத் தலைவன் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதால் அவன் வெவ்வேறு நபர்களாகி விடுவானா என்ன? இதைப் போலதான் இறைவனும். இந்துமத கூட்டுக் குடும்பத்தில் பரம்பொருளான இறைவன் குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு தெய்வ மூர்த்திகளாக பல்வேறு பெயர்களில் அவரவர் இஷ்டத்திற்கேற்ப அழைக்கப்படுகிறான், வணங்கப்படுகிறான்.
//கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்?//
இப்போது புரிகிறதா மரைக்காயர் ஐயாரே எந்த வகையில் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் என்பது?
சரி அடுத்த விடயம் : நீங்கள் சுட்டிக்காட்டினீர்களே விப்ர புரானத்தில் கடவுளர் என்று அவர்கள் கடவுளர் அல்ல, தேவர்கள் என்பதை தாங்கள் அறிவீறா? இறைவனானவன் (பிரம்மம்) தேவர்களால் கூட இலகுவில் அடையமுடியாதவன் என்பதையும் தாங்கள் அறிவீறா?
இதை சாம வேததின் உபனிடதங்களுள் ஒன்றான "கேனோபநிடதத்தின்" நான்காவது பாகம் மிகவும் அழகாக விளக்குகிறது
அது மட்டுமள்ள இந்து மதத்தில் புராணங்கள் என்ற பெயரில் அநேகமான நூல்கள் காணப்படினும் அவற்றில் (இந்துக்களால்) மிக முக்கியமானதாக கொள்ளப்படும் புராணங்கள் பதினெட்டு அகும் அவை மஹா புராணங்கள், பதினென் புராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவை பின்வறுமாறு
- பிரம்ம புராணம்
- பதுமப் புராணம்
- வைணவ புராணம்
- சைவ புராணம்
- பாகவதம்
- பவிஷ்ய (பெளடீக) புராணம்
- நாரகிய புராணம்
- மார்க்கண்டேய புராணம்
- ஆக்கினேய புராணம்
- பிரம்ம கைவர்த்தன புராணம்
- இலிங்க புராணம்
- வராக புராணம்
- வாமண புராணம்
- கூர்ம புராணம்
- மற்ச புராணம்
- காகுட புராணம்
- ஸ்காந்த புராணம்
- பிரமாண்ட புராணம்
இப்பதினென் புராணங்களின் பட்டியலில் நான் எவ்வளவோ முயன்றும் தாங்கள் சுட்டிக்காட்டிய விப்ர புராணத்தை கண்டு பிடிக்க முடியவில்லையே மரைக்காயர் ஐயா(?). அது மட்டுமல்ல ஒரு புராணத்தில் உள்ள ஒரே ஒரு கதையை மட்டும் வைத்துக்கொண்டு அந்த புராணமே பிழையானது என்று சொல்வது எந்த வகையில் முறையாகும் மரைக்காயர் ஐயாரே ?
தாங்கள் என்னவென்றால் இந்த ஒரு கதையை வைத்துக்கொண்டு புராணம் மட்டுமல்ல இந்து மதமே தவறு என்று வாதிடுவது எந்த அடிப்படையில் ?
அடுத்தவிடயம்: இங்கே இலங்கையில் எனக்கு தெரிந்தவரை யார் வேண்டு மானாலும் எந்த இந்துக்கோயிலுக்கும் செல்லலாம் எந்த தடையும் இல்லை அவர் கிருஸ்த்தவராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி எந்த ஜாதியாக இருந்தாலும் கொயிலுக்கு செல்ல எந்த தடையும் இல்லை. இவ்வளவு ஏன் எத்தனையோ இஸ்லாமியர்கள் இந்துக் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை என் கண்களாளேயே கண்டிருக்கிறேன். அது மட்டுமல்ல இலங்கையில் நான் பிறந்த ஊரில் எனது பாட்டனார் கட்டிய கோயில் கூட இன்று நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் (எனக்கு இந்த ஜாதி பேதமெல்லாம் தெரியாது) பராமரிப்பில் தான் இருக்கிறது என்று அறிகிறேன்.
// // உங்களுக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமின்மையால் தாங்கள் இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்றீர்கள். //
உண்மைதான். எனக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமில்லைதான். அதனால்தான் எழில் போன்ற சான்றோர்களிடம் இந்து மதம் பற்றிய கேள்விகளை முன்வைக்கிறேன். ஆனால் சரியான பதில்தான் கிடைப்பதில்லை. நான் இந்துமதம் பற்றி விமரிசனங்கள் தெரிவிக்கிறதாக சொல்லியிருக்கீங்க. அப்படியில்லை. நான் இதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்//
என்று பின்னூட்டத்தில் தாங்கள் இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்கிறீர்கள் அப்படியானால் இதற்கு என்ன பெயர் ஐயாரே?
அது போகட்டும் ஐயா ஏக இறவனை வழிபடும் தாங்கள் இங்கே கூறப்பட்டுள்ள விடயத்தை கடவுளாக ஏற்றுக்கொள்கிறீர்களா?
மதிப்பிற்குரிய மரைக்காயர் ஐயார் அவர்களே நான் தங்களைப்போல் அதிகம் கற்றிராத இளைஞன். எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் தங்கள் வினாக்களிற்கு விடையளிக்க முற்பட்டிருக்கிறேன் தங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று கருதுகிறேன் இன்னும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்.
எனது வசன நடை யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் எனக்கு தெரிந்த வசன நடை இதுதான். அத்துடன் இதுதான் எனது முதல் எழுத்துப் படைப்பும்கூட இதற்கு முன் எழுதிய அனுபவம் கிடையாது.
தங்களது ஏனைய வினாக்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் விடை தருகிறேன்.
எனது அடுத்த பதிவு இறைவனை கட்டுப்படுத்த முடியுமா?
நன்றி.