Friday, October 27, 2006

உண்மையாண இந்துக்கள்

சிவமயம்

உண்மையாண இந்துக்கள் என்போர் யார்?
இந்துவாக இருந்துகொண்டு இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா? என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இந்துக்களாக பிறந்த அனைவரும் உண்மையாண இந்துக்கள் அல்ல. என்ன காரணம்? இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் உண்மையாக இந்து தர்மத்தை கடைப்பிடிக்கிறோமா? என்பதைத்தான் கவணிக்கவேண்டுமே ஒழிய இந்துவாக பிறந்துவிட்ட அனைவரும் உண்மையாண இந்துக்கள் அல்ல.

என்னடா யார் இவன்? எங்கிருந்துவந்தான் என்று ஒன்றுமே தெரியாது அதிலும் வேறு ஏதேதோ உளறுகிறான் என்று பார்க்கிறீர்களா சரி முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.

அகவை இருபது மட்டுமே நிரம்பிய சாதாரண இளைஞன். இலங்கையில் இருந்து வலைப்பதிகிறேன். எனது முதல் வலைப்பதிவு இதுதான். வலைப்பதிவு உலகத்திற்கு வந்தோரை வாழ்த்தும் உங்கள் அனைவரின் ஆதரவை நாடி நானும் வருகிறேன். எமக்குள் கருத்தளவில் முரண்பாடுகள் இருந்தாலும் நட்பு ரீதியில் எந்த முரண்பாடுகளும் இல்லாதிருக்க வேண்டுகிறேன் அத்தோடு வலைப்பதிவுலகில் நிறைவாக கற்ற அறிஞர்கள் நிறையவே இருக்கிறீர்கள் நான் தங்களைப்போல் அதிகம் கற்றிராத இளைஞன் என்னிடம் தவறுகள் இருப்பின் அவற்றை தாங்கள் சுட்டிக்காட்டினால் இன்முகத்துடன் திருத்திக்கொள்வேன்.

இனி விஷயத்திற்கு வருவோம். இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் உண்மையாக இந்து தர்மத்தை கடைப்பிடிக்கவிள்ளை இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இதை மறுக்கமுடியாது. இவ்வாறிருக்கையில் இந்து தர்மம் சொல்வதை எல்லாம் இக்காலத்தில் கடைப்பிடிக்கமுடியாது என்று வாதிடுபவர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் உண்மை அதுவல்ல இந்து மதம் அனைவரும் கடைப்பிடிக்கக்கூடிய அடிப்படையான ஒரு தர்மத்தை சொல்கிறது அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதான் " அன்பே சிவம் ". அதாவது அன்பு என்ற ஒன்றே ஈசன் என்று சொல்கிறேன். இந்த அன்பினால் இறைவனை இலகுவாக அடையமுடியும்.

அதாவது இங்கே அன்பு என்பது நமக்கு பிடித்தவர்களின் மீது மட்டும் செலுத்தப்படுவது என்ற வரையறையை தாண்டி " அனைவர் மீதும், ஏன் உலகின் அனைத்து ஜீவராசிகள் மீதும் பயன்கருதாமல் செலுத்துவதாக இருக்கும் அதேவேலை அது ஜாதி, மதம், மனிதன், மிருகம்,உயர்திணை, அஃறிணை போன்ற எந்தவித பாகுபாடும் பார்க்காத, எந்த ஒரு ஜீவனுக்கும் உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் எந்த ஒரு தீங்கும் ஏற்படாமலும், ஏற்படுத்தாமலும் இருக்கும் நிலையையே குறித்து நிற்கின்றது ". இந்த "அன்பு" என்பதற்கு இந்து மதம் கொடுக்கும் வரைவிலக்கணம் இதுதான்.

எம்மில் எத்தனை பேர் இன்று இந்து மதம் சொல்கின்ற இந்த அடிப்படை தர்மத்தையாவது கடைப்பிடிக்கிறோம்? அதிகம் தேவையில்லை இந்துக்களாகிய எம்மில் எத்தனை பேர் இன்று புலால் மறுக்கிறோம்?. "இலங்கிடும் உயிர் அனைதும் ஈசன் கோயில்" என்பது சைவ மரபு. ஈசன் வழிபாடு இரண்டு வகை. ஒன்று கோயில் வழிபாடு மற்றொன்று எல்லா உயிர்களிடத்தேயும் அன்பு செலுத்துவதாகிய உயிர் வழிபாடு. ஆலயமும் உயிரும் முறையே "படமாடும் கோயில், நடமாடும் கோயில்" என்று திருமூலர் கூறுகிறார் இதில் நடமாடும் கோயில் வழிபாடே சிறந்தது. அதற்காக கோயில் வழிபாடு தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அதற்கும் ஒருகாரணம் உண்டு அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

இங்கே அன்பை பற்றி கூறினோம் அது பயன் கருதாததாக இருக்கவேண்டும் என்று கூறினோம் இங்கே "பயன்"க்கு என்ன வேலை என்று பார்ப்போம் உதாரணமாக ஒரு பால்க்காரனை எடுத்துக்கொண்டால் அவன் தினமும் இரண்டு, மூன்று வேளை பசுவுக்கு உணவு, நீர் என்பவற்றை கொடுக்கிறான் ஏன், அவனுக்கு அந்த பசுவின் மூலம் பால், மற்றும் பல (பணமும் கூட) பயன்கிடைக்கிறது அதனால் அவன் பசுவின் மேல் அன்பு காட்டுகிறான். இது நான் சொல்கின்ற அன்பு கிடையாது. நான் சொல்வது என்னவெனில் " எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு உயிரையும் தேவையேற்பட்டாலோ, தேவையேற்படாமலோ எந்த வகையிலும் வருத்தாது இருத்தல்வேண்டும். (தன்னுயிரே போகும்நிலை வந்தாலும் கூட கொல்லாமை வேண்டும்) " என்பதாகும். திருவள்ளுவரும் கூட இதைத்தான் சொல்கின்றார். இவ்வறான அன்பை உடையவன் ஈசன். அவனின் அன்பை நாம் "அருள்" என்கிறோம் அது எல்லா உயிர்களையும் தழுவியது அதற்கு பாகுபாடு கிடையாது அவ்வாறான அவனின் அன்பை அடைய ஜீவகாருண்யத்துடன் அவன்வழியில் (அன்பின் வழியில்) அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அன்பாக உறையும் ஈசனை இலகுவில் அடையமுடியும். ஆகவே எவனொருவன் ஜீவகாருண்யத்துடன் அனைத்து உயிர்களிடத்தும் பயன் கருதாத அன்பு செலுத்துகிறானோ அவனே உண்மையான இந்து.









No comments: